மே தினத்தோடு பிரச்சாரங்கள் ஆரம்பம்!



மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு  பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

அடுத்து என்ன தேர்தல் என்பது தொடர்பான அறிவிப்பு தமிழ், சிங்கள புத்தாண்டு முடிந்த பின்னர் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனத் தெரியவருகின்றது.

முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவுள்ளது . இதற்கான முடிவை ஜனாதிபதி எடுத்துவிட்டார் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

எனவே, மே தினக் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்தி, அன்று முதல் தேர்தல் பிரசாரத்தையும் தீவிரப்படுத்த கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments