தேர்தல் வரும் பின்னே-யானை வரும் முன்பே!



தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க் எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகையின்போது  வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில்   அடுத்த கட்டமாக காணி விடுவிப்பு நடவடிக்கையில் பலாலியில் 278 ஏக்கர்  விவசாய நிலம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே  வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து கடந்த வாரம்  விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு -தென்மயிலை  பிரிவில் உள்ள தமது சொந்த காணியை 34 வருடங்களின்  பின்னர்  மக்கள் சென்று பார்வையிட்டனர். அக்காணியானது வறுத்தலைவிளான் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வீதிக்கு அருகில் உள்ளதுடன் இங்கு 40 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

இராணுவத்தினர் தமது உடமைகளை எடுத்து முடித்த நிலையில் கிராம சேவையாளரிடம் இராணுவத்தினர் காணியின் பொறுப்பினை கொடுத்தனர். 

இந்நிலையில் மீண்டும் விடுவித்து வழங்கவே ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.


No comments