ஊடக அமையத்திற்கு பாராட்டு!



வழக்கறிஞர் புகழேந்திக்கான கௌரவத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்த யாழ்.ஊடக அமையத்தை தொடர்ந்தும் பாராட்டிவருகின்றனர்.

மூத்த போராளியொருவர் தனது பதிவில் சாந்தன் உடலை ஊருக்கு எடுத்துச் சென்று தாயாரிடம் ஒப்படைத்திருக்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. அப்போது சாந்தன் பல நாட்களாக கழுத்தில் கட்டியிருந்த மாலையையும் தாயாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சாந்தனின் தாயார் வழக்கறிஞரின் காலில் விழுந்து என் மகனுக்கு நான் செய்யாத கடமை எல்லாம் நீங்கள் செய்துள்ளீர்கள்” என்று அழுதுதிருக்கிறார்.

“உங்கள் மகன் சாந்தனை உயிருடன் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றேன். முடியாமற் போய்விட்டது” என்று கூறி அழுதிருக்கிறார் வழக்கறிஞர்.

மூன்று நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று அருகில் இருந்து அவதானித்த முன்னாள் பெண் போராளி ஒருவர் பதிவு செய்கிறார்.

வழக்கறிஞரின் இந்தப் பணியை பாராட்டி கௌரவித்துள்ளது யாழ் ஊடக மையம்.

சாந்தன் மரண நிகழ்வில் பங்கு பற்றிய முருகன் தாயார் எப்படியாவது என் மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் என வழக்கறிஞரின் கரங்களை பிடித்து கெஞ்சுகிறார்.

வழக்கறிஞர் புகழேந்தி வெறும் வழக்கறிஞர் மட்டுமல்ல. அவர் ஒரு தமிழ்த் தேசிய உணர்வாளர்.

அதுவும் தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்த்தேசிய விடுதலையை நேசிப்பவர்.

அதனால்தான் அவர் நான் இந்தியனாக வரவில்லை. தமிழனாக கூறுகின்றேன் “ சாந்தன் மரணத்திற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் இரண்டுமே பொறுப்பு” என பகிரங்கமாக யாழ்ப்பாணத்தில் கூறினார்.

அவர் சிறப்புமுகாமில் உள்ளவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து உதவி வருகிறார்  என தெரிவித்துள்ளார்.




No comments