சவுக்கடி புத்தர்:சத்தமின்றி வெளியேறினார்!
யாழ்ப்பாணம் - சுழிபுரம் சவுக்கடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் நாட்டப்பட்ட புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ்; தெரிவித்திருந்தார்.
போராட்டத்தில் அனைவரையும் கலந்து ஆதரவளிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
எனினும் சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த புத்தர் அகற்றப்பட்டுள்ளதாக சுகாஸ் கனகரத்தினம் இன்றிரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புத்தர் சிலையை அகற்றப்பட்டதால் நாளை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுவதாகவும் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களால் எதனையும் சாதிக்க முடியாதென்பவர்கள் இனியாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் கைகோர்க்கவும் சுகாஸ் அழைப்புவிடுத்துள்ளார்.
Post a Comment