சிவராத்திரி முன்னேற்பாடு:மதகுரு கைது!
வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா இலங்கை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள சிவராத்திரி விழா ஏற்பாடுகளை செய்த வேளையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்ற பூசகரும், நாளைய தேவைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்ட தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர் பௌசர் போன்றன இலங்கை காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டிருந்தது.
அத்தோடு சிவராத்திரிகாகன ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதி பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உலகெங்கும் வாழும் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் மகாசிவராத்தியை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
”உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால், அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் செய்த பிரார்த்தனையை நினைவு கூறுவதாக அமைந்திருக்கிறது.
மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் என பிரார்த்திக்கின்றேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment