அனுராவை பயணமனுப்பும் தூதர்!



தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கனடா செல்லவுள்ள நிலையில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் கொழும்பில் அவரை சந்தித்து பேசியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது.

சந்திப்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் விஜித ஹேரத்தும் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பின் போது இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

கனடாவில் வசிக்கின்ற இலங்கையரைச் சந்திப்பதற்கான அநுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயத்துக்கு நல்வாழ்த்துக்களையும் அதன்போது தூதுவர் தெரிவித்துள்ளாராம்.

அதேவேளைஇ கடனாவின் டொரொன்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட கூட்டமொன்றில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொள்ள உள்ளதாக ஜே.வி.பி பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது.

கூட்டத்தில் டொரொன்டோவில் உள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ஜே.வி.பியின் ஆதரவாளர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர்.

எனினும் வடகிழக்கில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பாக ஜேவிபி இன்றளவிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments