தூதர் திரும்பினார்:ஏட்டிக்கு போட்டியாக முற்றுகை அறிவிப்பு
வடக்கிற்கு இந்திய துணைதூதர் வருகை தந்து திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும் என அரச மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்பு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.
யுhழ்ப்பாணத்திலுள்ள துணைதூதர் இடமாற்றப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம்பிரியாவிடை நிகழ்வை யாழிலுள்ள நட்சத்திர விடுதியில் நடாத்திவருகின்றார்.
இந்நிலையில் போட்டியாக ஊடக சந்திப்பினை அரச அமைச்சர் டக்ளஸ் ஆதரவு பெற்றதரப்பென கூறப்படும் யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம், செயலாளர் அன்ரன் செபராசா, மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் குணரத்தினம் குணராஜன் ஆகியோர் கலந்துகொண்டு முற்றுகை போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
Post a Comment