உயர்பாதுகாப்பு வலயம்:மீண்டும் கம்பி கட்டும் கதைகள்!



ஒருபுறம் ஜனாதிபதி மாளிகைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை தாரைவார்க்க திரைமறைவு முயற்சிகள் தொடர்கின்ற நிலையில் வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள  காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை காணியை தாரைவாhப்பதற்கு எதிராக குரல்கள் வலுத்துள்ள நிலையில் அதனை திசைதிருப்ப விவசாய காணிகள் விடுவிப்பு , இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆலயங்களுக்கு வழிபட அனுமதிப்பது தொடர்பில் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  300 ஏக்கர் விவசாய நிலம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த விடுவிப்பது குறித்து இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும் வறுத்தலைவிளான் , காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 30வருடங்கள் அவ்வாறு பிரச்சாரங்கள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments