தெற்கில் குறுக்கோட்டங்கள் உச்சம்!



தெற்கில் பேரம்பேசல்கள் மும்முரமடைந்துள்ள நிலையில் கட்சி தாவல்களும் உச்சமடைந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த நான்கு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதோடு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பொதுஜனபெரமுன படை அதிகாரிகள் பலரும் ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


No comments