உலகின் வயதான நாய் என்ற கின்னஸ் பட்டம் பறிக்கப்பட்டது


உலகின் மிக வயதான நாய் என்ற பட்டம் நாயின் மரணத்திற்குப் பின் பறிக்கப்பட்டது.

போபி (Bobi)என்ற நாயின் உண்மையான வயது தொடர்பான சர்ச்சையின் காரணமாகவே இப்பட்டம் பறிக்கப்பட்டது.

உலகின் வயதான நாய் என்ற கின்னஸ் உலக சாதனை போபி நாய்க்கு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த நாயின் வயது நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை கின்னஸ் அமைப்பு கூறியது.

போபி என்ற நாய் போர்த்துக்கல் நாட்டை சேர்ந்தது. இதற்கு 30 வயதும் 165 நாளும் என்று சாதனையின் போது கூறப்பட்டது. போபி அக்டோபர் 2023 இல் 31 வயது மற்றும் 165 நாட்களில் இறந்தது.

போபியின் பிறந்த திகதியை உறுதியாக நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரம் எங்களிடம் இல்லை என்று உலக கின்னஸ் சாதனை அமைப்பு கூறியது. 

போபியின் வயதை நிரூபிப்பதில் அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் விசாரணையைத் தொடங்கியது.

ஆனால் நாயின் வயதின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்று போபி நாயின் உரிமையாளரான லியோனல் கோஸ்டா கூறியிருந்தார். 

நாய் இனம் பொதுவாக 12 வயது தொடக்கம் 14 வயது வரை வாழ்கின்றது.

1939 ஆம் ஆண்டு தனது 29 வயது மற்றும் ஐந்து மாதங்களில் இறந்த ஆஸ்திரேலியாவின் ப்ளூய் என்ற நாய்தான் இதற்கு முன் மிகவும் வயதான நாய் என்ற சாதனையைப் பெற்றது என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.


No comments