அச்செழுவில் வாள் வெட்டு - இருவர் காயம்


யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான 44 மற்றும் 45 வயதான வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளனர்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாடே வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments