நிலவில் தரையிறங்கியது அமெரிக்கத் தனியார் நிறுவனத்தின் விண்கலம்!!


ஒடிஸியஸ் (Odysseus) நிலவின் தென் துருவரத்திற்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது என்பதை அமெரிக்க தனியார் வணிக நிறுவனமான இன்ரியுரிவ் மெசின்ஸ் (Intuitive Machines) உறுதிப்படுத்தியது.

நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் தனியார் நிறுவனம்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சந்திரனுக்கு வெற்றிகரமான பயணத்தைத் தொடங்காத நாசா மற்றும் அமெரிக்க வான் மற்றும் விண்வெளி சமூகத்திற்கும் இது ஒரு பெரிய வெற்றி நாளாகும்.

சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், ரேடியோ அலைகளை அளவிடவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆறு அறிவியல் கருவிகளை நாசா சார்பில் விண்கலம் சுமந்து செல்கிறது.

No comments