ஜேவிபி வாக்கு பிச்சைக்கு முன்னர் மன்னிப்பு கோரட்டும்!
தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஜேவிபி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு வாக்குகளை இலக்கு வைத்து அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் பிரதிநிதிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழர்களுடன் ஜேவிபி பேசுவதற்கு முன்பாக பிரதான இரண்டு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
ஒன்று ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்கள் கோரி நிற்கும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது ஜேவிபியின் முன்னாள் தலைவர் றேஹண விஐயவீர, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் 2006 இணைந்த வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு உயர்நீதிமன்ற வழக்கே காரணமானது.
2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கையில் சாரை சாரையாக சிங்கள இளைஞர்களை இராணுத்தில் இணைவதற்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறித்தனமான பிரசாரத்தை மேற்கொண்டதுடன் யுத்த வெற்றியை ராஐபக்ச குடும்பத்துடன் பாற்சோறு வழங்கி கொண்டாடியது ஜேவிபி தமிழர்களுக்கு செய்த வரலாற்று தவறு எனவும் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment