மேலும் 500 ஏக்கர் வேண்டுமாம்!
உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மேலும் 500 ஏக்கர் காணியை சுவீகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விமான நிலைய வசதிகள், உட்கட்டமைப்பு என்பன மேம்படுத்தப்பட்டவுள்ளதாகவும் இதனால் இலங்கையின் வடக்கு இணைப்பில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
விமான நிலைய வடிவமைப்பு, கட்டுமானம், நிதியுதவி, செயல்பாடு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய விஸ்தரிப்பு மூலம் எயர்பஸ் விமானங்களை தரையிறக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே அதே உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யுத்த முடிவுற்றதான அறிவிப்பின் 13வருடங்களின் பின்னராக புதிய சலுகை பற்றி தெரிவித்துள்ளார்.
Post a Comment