திருகோணமலையில் உள்ள மூன்று விகாரைகள் புனித தலங்களாக அறிவிப்பு
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிபாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த 11 வழிப்பட்டு இடங்ககளில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 4 விகாரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை மற்றும் திருகோணமலை குச்சவௌி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம், சாந்தி விகாரை, யான் ஓயா விகாரை, உள்ளிட்ட தலங்களே புனித பூமிகளாக பெயரிடப்பட்டிருக்கின்றன.
அதற்கமைய தற்போது வரையில் நாட்டின் 142 வழிபாட்டுத் தலங்கள் புனித பூமிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்போது புத்த சாசனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசிலமைப்புக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்பணிப்புடன் செயற்படுவாரென ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
Post a Comment