யாழில் காதல் மனைவிக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்டவர் கைது!


காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையா செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட இரு சந்தேகநபர்களிட் இருந்து, 25 பவுண் தாலி கொடி ஒன்றும், 4 பவுண் நகை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் வசித்து வந்த வீடொன்றில் காதலர் தினத்தன்று, உட்புகுந்த திருடர்கள் 29 பவுண் நகைகளை திருடி சென்று இருந்தனர்.

சம்பவம் தொடர்பில், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் யாழ். நகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை நகை கடை ஒன்றில் 4 பவுண் நகையை விற்பனை செய்ய வந்த பெண்ணொருவர் மீது கடை ஊழியர்கள் சந்தேகமடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

தகவலின் பிரகாரம் கடைக்கு விரைந்த பொலிஸார் பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்த 4 பவுண் நகையும் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது, தனக்கு நகைகளை தந்து விற்பனை செய்ய கூறிய நபரை அடையாளம் காட்டினார்.

பெண்ணின் வாக்குமூலத்தின் பிரகாரம் அந்நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, அவரே வல்வெட்டித்துறை வீட்டில் திருட்டில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 25 பவுண் தாலுக்கொடி மீட்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட இரு நபர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

No comments