ஐரோப்பாவின் முன்னோடிச் செயற்கைக்கோள் பூமியில் விழுந்து நொருக்கவுள்ளது!


ஐரோப்பாவில் முன்னேடியாக விளக்கும் ERS-2 செயற்கைக்கோள் இன்னும் சில மணி நேரங்களில் பூமியில் விழவுள்ளது.

ERS-2 செயற்கைக்கோளானது 1995 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. அக்காலத்தில் இச்செயற்கைக் கோளானது அதிநவீன ஒரு காண்காணிப்புத் தளமாக இருந்தது. இச்செயற்கைகோள் கோள்களைக் கண்காணிக்கப்பயன்படும் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டது.

இதன் பயன்பாடு 2011 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இன்று புதன்கிழமை பூமியை நோக்கி விழுகிறது.

இரண்டு டன் எடை கொண்ட செயற்கைக்கோளில் பெரும்பாலானவை கீழே செல்லும் வழியில் எரிந்து விடும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (Esa) கூறுகிறது.

அதிவேக டைவிங்கின் போது உருவாகும் தீவிர வெப்பத்தை இன்னும் சில வலுவான பாகங்கள் தாங்கும் சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த துண்டுகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்கி சேதத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

அவை உலகில் எங்கும் தரையிறங்கக்கூடும், ஆனால் பூமியின் மேற்பரப்பின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. இதனால் விழும் செயற்கைக்கோளின் குப்பைகள் கடலில் விழக்கூடிய வாய்ப்புள்ளது.

வளிமண்டலத்தில் மீண்டும் நுழையக்கூடிய இக் செயற்கைக்கோள் துண்டுகள் எந்தவித கதிரியக்க அல்லது நச்சுத்தன்மை வாய்ந்தவையோ அல்ல என்று கூறப்பட்டுள்ளது.


No comments