உக்ரைன் தாக்குதலில் 60க்கு மேற்பட்ட ரஷ்யப்படைகள் பலி!!
உக்ரைனில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவத்தினரின் பயிற்சி இடங்களை இலக்கு வைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் 60 ரஷ்யப் படைகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூத்த தளபதியின் வருகைக்காக டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள தளத்தில் துருப்புக்கள் கூடியிருந்த நிலையில் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வெளியான காணொளியில் அதிகளவான ரஷ்யப்படைகள் தரையில் உயிரிழந்து காணப்பட்டனர்.
கிழக்கு இராணுவப் பிராந்தியத்தின் 29வது இராணுவத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் Oleg Moiseyev இன் வருகைக்காகக் படைகள் காத்திருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ட்ரூடோவ்ஸ்கே கிராமத்திற்கு அருகே நடந்த சம்பவம் குறித்து ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்பில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Post a Comment