டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு!!


இந்திய மத்திய அரசாங்கத்துடன் விவசாயிகள் நடத்திய நான்கு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து. இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் மீண்டும் அணிவகுப்பு போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியிருந்தார்கள். அப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது இன்று புதன்கிழமை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

டெல்லியின் எல்லைகள் பல அடுக்கு தடுப்புகள் மற்றும் முட்கம்பிகளால் விவசாயிகள் உள்ளே வரமுடியாத அளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் தடைகளை உடைப்பதற்கு கனரக வாகன இயந்திரங்களைப் பயன்படுத்துவோம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

டில்லிக்கு அருகிகல் உள்ள மாநிலங்கான பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையே உள்ள ஷம்பு எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் புல்டோசர்கள் மற்றும் மண் அள்ளும் கருவிகளைப் பயன்படுத்தி கடந்த தடைகளைத் தள்ளத் தயாராகி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் எல்லையை நோக்கி செல்ல முயன்றபோது அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் வீசினர்.

காவல்துறையின் தாக்குதலில் இருந்து தங்களைக் தற்காத்துக் கொள்ள முகமூடிகள், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உடைகளைப் பயன்படுத்தினர்.

காவல்துறையினன் டிரோன்களைச் செயலழிழக்கச் செய்ய பட்டங்களை (காத்தாடிகளை) விவசாயிகள் பறக்கவிட்டனர். காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீச டிரோன்களைப் பயன்படுத்தினர்.

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படைகள் தங்கள் சகோதரர்களை தாக்க வேண்டாம் என்று  விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டே ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளை அழைத்துள்ளார். அமைதியைப் பேணுவது எங்களுக்கு முக்கியம் என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த அழைப்பிற்கு விவசாயிகள் இதுவரை பதிலளிக்கவில்லை.

விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு உறுதியான விலையைக் கோரி வருகின்றனர். அத்துடன் பல மாதங்கள் வழங்கக்கூடிய விநியோகத்திற்கும் தயாராக இருப்பததாகவும் கூறுகின்றனர்.

No comments