மேல்நீதிமன்ற நீதிபதி:சர்ச்சையான விவகாரம்!

 


கொழும்பு மற்றும் வடகிழக்கில் ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றிய ஒட்டுக்குழு முக்கியஸ்தர் ஒருவரது மரண நிகழ்வில் பங்கெடுத்து மேல்நீதிமன்ற நீதிபதியொருவர் அஞ்சலி செலுத்தியமை சட்டத்துறை வட்டாரங்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஸ்ட உபதலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) நேற்று கொழும்பில் மரணித்திருந்தார்.

ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையின் பிரதான சூத்திரதாரியென அடையாளப்படுத்தப்பட்ட ஆர்.ஆர் மரணமான நிலையில் அஞ்சலி செலுத்த சென்ற மேல்நீதிமன்ற நீதிபதி அவமதிக்கப்பட்டமையே சீற்றத்தை சட்டத்துறை வட்டாரங்களிடையே உருவாக்கியுள்ளது.

மாகாணசபை தேர்தல் மற்றும் முதலமைச்சர் கனவுகள் மத்தியில் இடம்பிடிக்கும் அஞ்சலியென சில தரப்புக்கள் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

இதனிடையே வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் இறுதிக் கிரியைகள்,   வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் மாவட்டத் தலைமையகத்தில் நாளைமறுதினம் (இடம்பெற்று  நல்லடக்க நிகழ்வும் நடைபெறுமென கட்சி அறிவித்துள்ளது.




No comments