அமெரிக்காவின் மற்றுமொரு MQ-9 ரீப்பரைச் சுட்டுவீத்திய ஹவுதிகள்
அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். 2023 நவம்பர் மாதத்தில் ஏமன் கடல்லை எல்லையான செங்கடலில் MQ-9 ரீப்பரை ஹூதிகள் சுட்டு வீழ்த்தினர்.
விமானத் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காளொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக எதுவித பதிலையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை.
![]() |
| ஹவுதிகளால் 19.02.2024 அன்று சுட்டு வீழ்த்தப்பட்ட MQ-9 ரீப்பர் |
MQ-9 ஆளில்லா விமானம் அமெரிக்க வான்படையால் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வேவு மற்றம் தாக்குதல் நடத்தும் விமானம் ஆகும்.
அமெரிக்க விமானப்படை ஹவுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போராளிகள் நகர்வுகளைக் கண்காணிக்கவும் தாக்குதல்களை நடத்தவும் MQ-9 ரீப்பர்களைப் பயன்படுத்துகிறது.
யேமனில் உள்ள ஹவுதிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களுக்கா வேவுத் தகவல்களை திரட்ட இந்த விமானம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இராணுவ கண்காணிப்பாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தார்.
அத்துடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதிகள் தங்கள் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் நீருக்கடியில் செல்லும் ஆளில்லா டிரோன் ஆகியவற்றை உள்ளடக்கிவாறு 5 தாக்குதல்களை நடத்தினர். ஆனால் இத்தாக்குதல்களை மயிரிழையில் முறியடித்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை அறிவித்துள்ளது.
அக்டோபர் 23, 2023 க்குப் பிறகு ஹவுதிகள் நீருக்கடியில் ட்ரோனைப் பயன்படுத்திய தாக்குதல் மேற்கொண்டமை இதுவே முதல் முறையாகும்.
![]() |
| ஹவுதிகளால் நவம்பர், 2023 ஆண்டு யேமனில் சுட்டு வீழ்த்தப்படும் MQ-9 ரீப்பர் |
அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் உண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால், இது அமெரிக்காவிற்கு மற்றொரு பின்னடைவாகும். அதிநவீன திறன்களைக் கொண்ட 30 மில்லியன் டொலர் மதிப்பிலான MQ-9 ரீப்பரை 10,000 ஆயிரம் டொலர் மதிப்புள்ள ஒரு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்க இது ஒரு பெரும் தோல்வியாகவும் அமையும்.
இதுவரை யேமனில் இரண்டு MQ-9 ரீப்பர் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதேபோன்று ஈராக்கில் MQ-9 ரீப்பர் ஒன்று ஈராக் எதிப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.



Post a Comment