சீனாவுக்கும் இந்தியாவிற்குமே வருவாய்!
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பினால் சீனாவின் சினோபெக் மற்றும் இந்தியாவின் ஐஒசி ஆகிய இரு நிறுவனங்களும் பாரிய இலாபத்தை ஈட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு காரணம் பெரும் நட்டத்தில் இயங்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டத்தாபனத்தின் நட்டத்தை பூர்த்தி செய்வதற்காகவே எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இது தொடர்பாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு எத்தனையோ முன்மொழிவுகளை கொடுத்திருந்தும் தான் ஒரு அமைச்சர் என்ற மோகத்தினால் எவருடைய கதையையும் கேட்காமல் நடந்துக் கொள்ளவதாகவும் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை பெட்ரோலிய கூட்டத்தாபனத்தின் நட்டத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் பொதுவாக எரிபொருளின் விலையை அதிகரிப்பதால் நட்டமே இல்லாமல் இயங்கும் சினோபெக் மற்றும் ஐஒசி ஆகிய இரு நிறுவனங்களும் பாரிய இலாபத்தை ஈட்டுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே நேற்றிரவு முதல் மீண்டும் எரிபொருட்களது விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment