தமன்னாவை கூப்பிடமுடியும்!சாந்தனை??

 


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி  மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை ஒரே இரவில் விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் சாந்தனை இலங்கைக்கு கொண்டுவர முடியாமல் போனது என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மு.கோமகன் அரசியல் கைதிகள் சிறைகளிலேயே மரணித்து போவது தமிழ் மக்களது சாபக்கேடாக உள்ளது.

இந்தியாவில் இருந்து தம்மன்னாவை கூட்டிவர தெரிந்த எங்களுக்கு உங்களை கூட்டி வர தெரியவில்லை.1000 கோடியில் படமெடுக்க தெரிந்த எங்களுக்கு உங்களை கூட்டி வர தெரியவில்லை. 

சுhந்தனை விடுவிக்க தவறிவிட்ட தமிழ் அரசியல்வாதிகள் இனிமேல் உடலத்தின் மீது அரசியல் செய்வதை கைவிடவேண்டும்.

சாந்தனின் மரணத்திற்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகளே பொறுப்பு கூறவேண்டுமெனவும் மு,கோமகன் தெரிவித்துள்ளார்.


No comments