சாந்தனின் சகோதரனை வெளியேற்றியதா தமிழக அரசு?

 இந்தியாவின் – தமிழ்நாடு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் உடலை யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துவருவதில் பலத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சாந்தனை பார்வையிட சென்றிருந்த அவரது சகோதரன் அவசர அவசரமாக தமிழக அரசினால் இலங்கைக்கு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படடிருந்தார்;.

அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 24ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சாந்தனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே சாந்தனின் உடல்நலத்தை பார்வையிட வருகை தந்திருந்த சாந்தனின் சகோதரன் மதிசுதா மதியம் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments