கனடாவிற்கு காவடி தூக்கும் ஜேவிபிஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளிற்காக வாக்குப்பிச்சையில் களமிறங்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணி புலம்பெயர் தமிழர்களை சந்திக்க முன்வந்துள்ளது.அவ்வiகியில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தின் போதே  கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த 5 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.அதன்போது, இந்தியாவின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு இரகசிய பயணத்தை முன்னெடுத்திருந்த நிலையில் எதிர்வரும் வாரம் அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பயணத்தின் போது அவர் மார்ச் 23 அன்று டொராண்டோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

முன்னதாக, அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments