யாழில். படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் இறுதி நிகழ்வை படமாக்க சுமந்திரன் தடை விதிப்பு


யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் நல்லடக்கம் உள்ளிட்ட இறுதி நிகழ்வுகளை ஊடகவியலாளர்கள் , இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுக்க ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தடை விதித்திருந்தார். 

படுகொலை செய்யப்பட்ட சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான தயாளினி திலீபனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , பூதவுடல் நல்லடக்கத்திற்காக கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 

அதன் போது விரிவுரையாளரின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள அவரது மகளை தாயாரின் இறுதி நிகழ்வுக்காக நீதிமன்ற அனுமதியுடன் யாழ்ப்பாண பொலிஸார் மயானத்திற்கு அழைத்து வந்திருந்தனர். 

அதன் போது, குறித்த பகுதியில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுக்க வேண்டாம் எனவும் அதனை மீறி எடுப்பவர்களை பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து இருந்தார். 

மகள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மயானத்தில் இருந்து பொலிஸார் அழைத்து சென்ற பின்னர் ஊடகவியலாளர்கள் பூதவுடல் நல்லடக்கம் மற்றும் இறுதி நிகழ்வை பதிவு செய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணியிடம் அனுமதி கோரிய போதிலும் ,, காணொளி புகைப்படம் எடுக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் விரிவுரையாளரின் குடும்ப நண்பர் மற்றும் அவர்களின் சட்ட ஆலோசகர் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

No comments