செங்கடலில் இங்கிலாந்துக் கப்பல் மீது ஏமன் ஹவுதிகள் தாக்குதல்
செங்கடலில் பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஏமனிலிருந்து ஹவுதி போராளிகள் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பார்படாஸ் கொடியேற்றப்பட்ட மார்னிங் டைட் இவ்வழியாக பயணித்தபோது யேமனின் ஹொடைடாவிற்கு மேற்கே 57 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
கப்பலின் சாளரப் பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டது என்றும் எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என ஐக்கிய இராச்சியம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் UKMTO அமைப்பு கூறியது.
தாக்குதலுக்கு முன் ஒரு சிறிய கப்பல் கப்பலுக்கு அருகில் இருந்ததாகவும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் தொடர்ந்தும் பயணித்ததாக UKMTO தெரிவித்துள்ளது.
Post a Comment