கொக்குவிலில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர் தவறி விழுந்து உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளி ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இளவாலை பகுதியை சேர்ந்த சூசை சுதர்சன் (வயது 38) எனும் நபரே உயிரிழந்துள்ளார். 

கொக்குவில் பகுதியில் இடம்பெற்று வரும் கட்டுமான பணியின் போது ,  இரண்டாம் மாடியில் வேலை செய்து கொண்டிருந்த வேளை தவறி விழுந்துள்ளார். 

சக தொழிலாளிகள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments