மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய்
பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருக்கிறது.
மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்காகச் (enlarged prostate) சிகிச்சை பெற்றபோது அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
எனினும் அவருக்கு எவ்வகையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
75 வயதுடைய மன்னர் பொதுக் கடமைகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
Post a Comment