வருவது டக்ளஸின் குண்டர்களே:அன்னராசா!



மீனவர்களுடைய பிரச்சனையை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வெளிக்கொண்டு வராமல் மூடி மறைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தனது ஆதரவாளர்களை வைத்து கூட்டத்தை நடாத்தியதாக ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச செயலாளர் அ.அன்னராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர்கள் பிரச்சனையை வடக்கில் மூடி மறைத்து சீனாவுக்கு கடலை விற்பதற்கு இவர்கள் துணை போகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசியல் பின்புலத்தோடு கலந்து கொண்டவர்கள். அதில் ஒருவரை தவிர ஏனைய அனைவரும் கிராமப்புறத்தில் கூட ஒரு சங்கத்தில் இல்லை, 

சங்கத்தில் இல்லாதவர்கள் கடற்தொழில் அமைச்சரின் ஆதரவாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள்தான் அந்த கூட்டங்களில் கலந்து கொள்கின்றார்கள்.

ஒரு அமைப்பில் இருந்து ஒருவர் என்றால் இரண்டு அமைப்புகளில் இருந்து மூன்று நபர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எப்படி இடம் கொடுப்பார்.

இதனால்தான் நாங்கள் சொல்லுகின்றோம் அரசியல் நோக்கத்தோடு மீனவர்கள் பிரச்சனையை வடக்கில் மூடி மறைத்து சீனாவுக்கு கடலை விற்பதற்கு இவர்கள் துணை போகின்றார்கள். சீனாவினுடைய பணத்திற்கு அடிமையாகி தான் இந்த செயற்பாடுகள் நடக்கின்றது. 

அதனால்தான் நான் சொல்லுகின்றேன் மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பிரதேச ரீதியாக மீனவர்களுடைய பிரச்சனையை எடுத்து மாவட்டத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நடந்த சம்பவத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனென்றால் இந்திய மீனவர்களுடைய பிரச்சினை அதைவிட மேலதிகமான பிரச்சனையாக தீவகம் அல்லாடி கொண்டிருக்கின்றது.

கடற்றொழில் அமைச்சராக இருந்து கொண்டு எங்களுடைய பிரச்சனையை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வெளிக்கொண்டு வராமல் மூடி மறைப்பதற்கு தனது ஆதரவாளர்களை வைத்துதான் அந்தக் கூட்டத்தை நடாத்துகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.


No comments