பிரித்தானியாவில் பூப்பந்தாட்ட தரவரிசையில் சாதித்த தமிழ் இளையோர்கள்!
சிறுவர்களுக்கான இங்கிலாந்து நாடு தழுவிய ரீதியிலான முதல் தரவரிசை பூப்பந்தாட்ட போட்டி கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றிருந்தது.இந்த போட்டியில் பல தமிழ் இளையோர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், பலர் வெற்றிகளையும் தமதாக்கி அவர்களுக்கும் எமக்கும் பெருமை சேர்த்திருக்கின்றார்கள்.
ஏற்கனவே உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் போட்டிகளில் கலந்து சிறப்பித்த போட்டியாளர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை சார்பாகவும் அனைத்து தமிழ் மக்கள் சார்பாகவும்பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்த போட்டியாளர்களுக்கு ஊக்குவித்து போட்டியில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த பயிற்றுவிப்பாளர் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை பெருமிதத்துடன்தெரிவித்துக் கொள்வதோடு
மேலும் இவர்களை பல வழிகளிலும் நாம் அனைவரும் இணைந்து ஊக்குவித்து ஆதரவு கொடுத்து எதிர்வரும்காலங்களிலும் இவர்களின் சாதனைகள் தொடர்ந்து நாம் அனைவரும் உறுதுணையாக இருந்திடுவோம் என உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினர் உறுதி கூறியுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் நாமும் தெரிவித்துக்கொள்வதோடு. அவர்கள் பிரித்தானிய ரீதியிலான தர வரிசையில் பெற்றுக்கொண்ட இடங்கள்.
1. ஜோனதன் தேய்வேந்திரன்
11 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள்
1ம் இடம் இரட்டையர் பிரிவு
2.ஜோனதன் தேய்வேந்திரன்
11 வயதுக்குட்பட்ட ஆண்கள்
3ம் இடம் ஒற்றையர் பிரிவு
3.வர்ஷா ஜெகதரன்
11 வயதுக்குட்பட்ட பெண்கள்
3 ம் இடம் இரட்டையர் பிரிவு
4.சஜன் செந்தூரன்
15 வயதுக்குட்பட்ட ஆண்கள்
1 ம் இடம் ஒற்றையர் பிரிவு
5. சஜன் செந்தூரன்
15 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள்
1 ம் இடம் இரட்டையர் பிரிவு
6. லாவண்யா கிருஷாந்தன்
15 வயதுக்கு கீழ்ப்பட்டபெண்கள்
3 ம் இடம் ஒற்றையர் பிரிவு
Post a Comment