இந்து சமயத்தை அரசியலமைப்பில் முன்னுரிமை?
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா , மாவட்டபுரம் அருள்மிகு கந்தசாமி கோயில் தலைவர் குருக்கள் மற்றும் சிவ பூமி அறக்கட்டளை தலைவர்ஆறு திருமுருகன் மற்றும் சிவ சேனை தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் கூடுதலானோர் கையொப்பமிட்ட வேண்டுகோளை இலங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சிவபால தேசிகர் செயலாளர் சிறீந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணிலிடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேரில் கையளித்தனர்.
மத மாற்றத் தடைச் சட்டம் . பசுவதை தடைச் சட்டம் கொண்டு வருக, இந்து சமயத்தை அரசியலமைப்பில் முன்னுரிமைச் சமயம் ஆக்குக ஆகிய மூன்று வேண்டுகோள்களை அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இம் மூன்றையும் உங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இலங்கையில் இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வாழ்வியலையும் நன்நெறியையும் இடையூறின்றிக் பேணவும் போற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆவ்வாறு செய்தால் இந்துக்களின் வாக்கு வங்கி ஆதரவை உங்களுக்காகப் பெற்று தருவோம் என மறவனபுலவு க. சச்சிதானந்தன் ரணிலிடம் நேரில் கூறியுள்ளார்.

Post a Comment