துண்டு துண்டாக விற்பனை!
பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் மத்தியில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் பொருளாதார நெருக்கடி காரணமாக திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தனியார் மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைக்க இலங்கை அமைச்சரவை அனுமதித்துள்ளது.
ஏற்கனவே பூநகரியில் கௌதாரிமுனை பகுதியிர்இந்திய தனியார் முதலீட்டாளர் அதானிக்கு காற்றாலைகளை அமைக்க இலங்கை அரசு அனுமதித்துள்ளது.
அதேபோன்று பூநகரியின் குடமுரூட்டி பகுதியில் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் வழமையான கேள்வி கோரல்கள் இன்றி தன்னிச்சையாக தமிழர் பகுதிகள் தாரை வார்க்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment