யாழில் மீனவரை காணோம்



யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் (வயது 32) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

இந்த இளைஞன் மேலும் இருவருடன் குருநகரிலிருந்து படகில் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார்.

கடலில் படகில் தங்கி தொழிலில் ஈடுபட்ட நிலையில், இரவு மூவரும் படகினுள் நித்திரைக்குச் சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது அதில் இருந்த இளைஞன் காணாமல் போயுள்ளார்.

அதனையடுத்து, இருவரும் கடலில் தேடி இளைஞரை காணாத நிலையில், கரை திரும்பி ஏனைய கடற்தொழிலாளர்களுக்கும் அறிவித்து பின்னர், மேலதிக படகுகளுடன் கடற்றொழிலாளர்கள் கடலில் சென்று தேடியும், இளைஞரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

No comments