சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்தது இலங்கை அரசு!
இலங்கை அரசின் ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நாளைய தினம் வியாழக்கிழமை மாலை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தென்னிலங்கையினை சேர்ந்த சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனிடையே ஊடகங்களது எதிர்ப்புக்கள் மத்தியில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அதன்படி, சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நிகழ் நிலை காப்பு சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment