நட்டாற்றில் தமிழ் மக்கள்:விந்தன்
கடந்த வருடம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முதலாம்,இரண்டாம் வாசிப்பிலே சமர்ப்பிக்கப்பட்ட விடயத்தில் உண்மைகளை மூடிமறைத்து 97 பொருட்களின் விலைவாசியை அரசு உயர்த்தியிருக்கின்றதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே விந்தன் கனகரட்ணம் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மக்கள் ஏற்கனவே யுத்த அவலத்தினால் அனைத்தினையும் இழந்து வீதியில் விடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய பொருளாதார நெருக்க தமிழ் மக்களை மேலும் மோசமாக பாதித்துள்ளதாகவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வரி எண்களை பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்தின் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையிலான காலம் மதிப்பீட்டு ஆண்டாகக் கருதப்படுகிறது.
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவு செய்துக்கொள்ளாதவர்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பதிவு செய்யும் எனவும் இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment