கறுப்பு ஜனவரி :யாழ்ப்பாணத்தில்!



இலங்கை அரசினால் ஊடக சுதந்திரத்தை முடக்க நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடக படுகொலைகளை நினைவு கூரும் வகையிலான கறுப்பு ஜனவரி இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்துடன் இணைந்து தென்னிலங்கை முன்னணி ஊடக அமைப்பான சுதந்திர ஊடக இயக்கம் நினைவேந்தலை முன்னெடுத்திருந்தது.

இலங்கை அரசினால் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை சட்டமூலத்தின் அபாயங்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்களது பிரதிநிதிகள் தெளிவூட்டப்பட்டிருந்தனர்.

அதேவேளை படுகொலை செய்யப்பட்ட மாற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் நினைவேந்தி சுடரேற்றிஅ ஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை ஈழத் தமிழர்களின் கரிநாளாக பிரகடனம் செய்வது தொடர்பாக சிவில் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்வரும் இலங்கை 75வது சுதந்திர தினமான 4ம் திகதியை ஈழத் தமிழர்களின் கரிநாள் அனுஸ்டிப்பு நாளாக தமிழ் தேசிய மக்கள் இயக்கம் பிரகடனம் செய்துள்ளது.

தற்போது வரை இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்து தமிழ் தேசிய நிலப்பரப்பில் முன்னெடுத்துச் செல்லும் இனப் படுகொலைகளை இனங்காட்ட  சுதந்திர தினத்தை கரிநாளாக முன்னெடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







No comments