பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் இங்கிலாந்தில் இளைய மருத்துவர்கள்


இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான இளம் மருத்துவர்கள் ஆறு நாள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இது தேசிய சுகாதார சேவையின் (NHS) 75 ஆண்டுகால வரலாற்றில் மிக நீண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டமாகும்.

இன்று புதன்கிழமை காலை 7:00 மணிக்குத் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் ஜனவரி 9 அன்று அதே நேரத்தில் முடிவடைகிறது.

பிரித்தானிய அரசாங்கத்துடனான நீண்டகால ஊதியப் பிரச்சினையின் மத்தியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் வந்துள்ளது. அரசாங்கத்துடன் டிசம்பம் மாதம் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் பேச்சு வார்த்தையை நடத்தியது.

பணவீக்கத்தை ஈடுகட்ட 35% உயர்வைக் கோரும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்  ஆல் 8-10% ஊதிய உயர்வுச் சலுகை போதுமானதாக இல்லை எனக் கருதப்பட்ட பிறகு பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

கிறிஸ்துமஸுக்கு முன்னைய வாரத்தில் இதே பிரச்சினையை முன்வைத்து ஜூனியர் டாக்டர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது.


No comments