பிடி-விடு: பிடி-விடு விளையாட்டு



இலங்கை கடற்பரப்பில் கடந்த 24 நாட்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 46 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 8 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கைதான தமிழக மீனவரகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டுமென இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கோரிக்கை விடுத்ததையடுத்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அண்மை நாட்களில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments