பிரித்தானியாவில் 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் உயிரிழப்பு
பிரித்தானியாவின் தெற்கு பிரிஸ்டலில் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 23:20 மணியளவில் கத்திக்குத் குத்து நடத்தப்பட்டது. தாக்குதலுடன் தொடர்புடைய குழு ஒன்று அங்கிருந்து மகிழுந்தில் தப்பி ஓடியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததும் சில நிமிடங்களில் வந்து சிறுவர்களுக்கு முதலுதவி அளித்தனர். ஆனால் இரண்டு சிறுவர்களுகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
சந்தேகத்தின் பெயரில் 44 வயதுடைய நபரும் 15 வயதுடைய சிறுவனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் கொலை விசாரணையை துவக்கியுள்ளனர்.

Post a Comment