டெங்கு காய்ச்சலினால் கொழும்பு பல்கலை மாணவி உயிரிழப்பு


டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பல்கலைக்கழக மாணவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கற்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்த ஹாசினி பாக்யா என்ற மாணவியே உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக கடந்த 5ஆம் திகதி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  11ம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 



No comments