இலங்கையில் பிரித்தானியக் குடிமகன் கைது!!
மதுபோதையில் காரை செலுத்திச் சென்றதாக கருதப்படும் பிரித்தானியக் குடிமகன் ஒருவர் கொள்ளுப்பிட்டிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய பிரித்தானியக் குடிமகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment