முல்லை பாதிப்பு உண்மையில் என்ன?



இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் மாத்திரம் ஆயிரத்து 708 குடும்பங்களைச் சேர்ந்த 5,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை தங்கவைக்கும் நோக்கில் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்காக வட மாகாணத்தின் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அரசின் அறிவிப்பிற்கு மாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக இதுவரையில் கனமழையால் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

எனினும் வடக்கில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில் இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது.

வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியுள்ள நிலையில் பெருமளவு பயிர்கள் அழிவினை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments