வீடு வீடாக அதானியும் தோழர்களும்!
இலங்கையின் வடபுலத்தின் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் சர்வதேச முதலீடுகள் வருகை தருகின்ற நிலையில் உள்ளுர் மக்களது எதிர்ப்பு மறுபுறமாக வலுக்க தொடங்கியுள்ளது.
ஏற்கனவே இந்திய அதானி குழுமத்தின் காற்றாலைகளிற்கு மன்னாரில் மக்களது எதிர்ப்புக்களை முன்வைத்துவருகின்றனர்.
அதேபோன்று பொன்னாவெளியில் யப்பானிய முதலீட்டிலான சீமெந்து தொழிற்சாலைக்கும் மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பூநகரியில் காற்றாலைகளை அமைக்கவுள்ள இந்திய அதானி நிறுவனமும்; சூரியகல மின்னுற்பத்தி திட்டத்தை முன்னெடுக்கவுள்ள அவுஸ்திரேலிய நிறுவனமும் மக்களிடையே பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளன.
அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயரஞ்சன், திட்டத்தின் சமூக பொருளாதார பாதிப்புகள் தொடர்பாக ஆராயும் நிபுணர் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதன், உள்ளிட்டவர்கள் மக்களை சந்தித்துள்ளனர்.
பூநகரி குளப் பகுதியின் அருகாமையிலுள்ள நல்லூர், கொல்லகுறிச்சி, பள்ளிக்குடா, ஆலங்கேணி, மட்டுவில்நாடு கிழக்கு பொது அமைப்புக்களை சந்தித்து நேற்றைய தினம் பேச்சுக்கள் நடந்துள்ளது.
இதனிடையே கௌதாரிமுனை பகுதியில் அதானி குழும அதிகாரிகள் மக்களை நேரில் சந்தித்துவருகின்றனர்.
காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்திகளிற்கு எந்த வித கூறுவிலை நடைமுறைகளும் பின்பற்றப்படாது நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜேவிபி கட்சியின் தலைவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
Post a Comment