யாழில் 15 பேர் கைது
யாழ்ப்பாணம், கொக்குவில், நந்தாவில் மற்றும் யாழ். தனியார் பேருந்து நிலையப் பகுதி மற்றும் பாடசாலைக்கு அருகில் என கடந்த இரண்டு நாட்களில் 15 பேர் கஞ்சா, ஹெரோயின்,போதை மாத்திரை என்பவற்றுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 15 பேரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த 15 பேரில் ஆறு பேர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களும் உள்ளடங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment