தேர்தலை மீண்டும் புறக்கணிக்க கோருகிறதா முன்னணி!



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  தமிழ் மக்கள் சார்பிலான பொதுவேட்பாளர் தொடர்பில் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தனது பெயரை முன்மொழிந்தால், அப்போதைய கள நிலவரங்களை அடிப்படையாகக்கொண்டு அதனைப் பரிசீலனை செய்வதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியொ தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்காமல் முற்றுமுழுதாக ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் “தமிழ்த்தேசிய விடுதலையை இலக்காகக்கொண்ட சமஸ்டி முறைமையிலான தீர்வை முன்னிறுத்தக்கூடியவகையில் தமிழ்த்தேசியம் சார்ந்த ஒருவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டில் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில் மகிந்த ராஜபக்ச வெற்றியை பெற்றிருந்ததுடன் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


No comments