அழுகிய முட்டைகள் கிடைக்கும்!
புலம்பெயர் தேசங்களில் அடைக்கலம் புகுந்திருந்துவிட்டு தற்போது தென்னிலங்கை ஆட்சியாளர்களது கூலிப்பட்டாளமாக களமிறங்கும் தரப்புக்கள் மீது உள்ளுர் மக்களது சீற்றம் வலுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழுகிய முட்டைகளை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக தமிழர் பேரவையினர் கொழும்பை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முதலில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து 2500 ஆவது நாளான இன்று(25) உலகத் தமிழர் பேரவையினருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுள்ளது.
உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும் அவர்கள் இமாலய துரோகிகள் எனவும் தெரிவித்திருந்ததோடு தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படம் மீது அழுகிய முட்டைகளை வீசி தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
Post a Comment