இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் கொண்டுவரும் ஐ.நா தீர்மானம் அமெரிக்காவினால் நிராகரிப்பு!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தையை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்தன. எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் 99வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.
ஹாமஸ் அமைப்பிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பேசி இருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வூட், போர் நிறுத்தம் மற்றொரு போரை உருவாக்கும் ஏனென்றால் நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment