ஜேர்மனி பூப்பந்தாட்ட தரவரிசையில் முன்னிலை வகிக்கும் தமிழ் சிறார்கள்


யேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள்.

யேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.

பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்கு

புள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் ஜெர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர்.

பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழி மார்க்கண்டு

ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.


அனிகா ஆனந்

இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் 17 வது இடத்தை பெற்றுள்ளார்.

ஹர்சத்குமார் கர்த்திக்

இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி யேர்மன் தழுவிய போட்டிகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஜெர்மன் ரீதியிலான தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்று தகுதி நிலையை அடைந்ததுள்ளார்.


இறுதிப் போட்டிகளின் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை இறுதிச்சுற்று வரை அனிகா வெளிப்படுத்தினார்.

தமிழி மிகவும் சிறப்பாக விளையாடி கால் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் ஜெர்மன் தழுவிய தரவரிசையில் 5 ஆம் நிலையை எட்டியிருந்தார்.

இதில் அதிநுட்பமாகவும் தனது திறமையையும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி மிக சிறப்பாக விளையாடி அனைவரினதும் பாராட்டையும் பெற்ற ஹர்சத்குமார் முதலிடத்தை பெற்று இந்த ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

இரட்டையர் ஆட்டத்தில் அனிகா கால் இறுதி வரை முன்னேறி வெளியேறினார்.

ஹர்சவத் குமார் அரையிறுதி

வரை முன்னேறி மிகக் கடுமையான போட்டியின் மத்தியில் மூன்றாம் இடத்தைத் தனது ஆக்கினார்.

தமிழி மிகவும் திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை வெற்றிகொண்டார்.

இந்த ஆண்டின் பூப்பந்தாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஜெர்மன் ரீதியில் இவர்கள் தங்களின் தடங்களை பதித்துள்ளனர்.

ஜெர்மன் தரவரிசையில் ஹர்சத் குமார் 2ம் இடத்தையும், தமிழி 3ம் இடத்தையும்.அனிக்கா 17ம் இடத்தையும் எட்டியுள்ளனர்.

இவர்களினது கடினமான பயிற்சியும் பெற்றோர்களின் விடாமுயற்சியும் தமிழர்களாகிய எம்மை இன்று பெருமை கொள்ள வைக்கிறது. வரும் காலத்தில் இன்னும் பல தமிழ்ச் சிறார்கள் பல சாதனைகளைப் படைக்க இவர்கள் முன் னுதாரணமாக இருக்கட்டும்.


No comments