பிணையில்லை!
மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டித்தமை தொடர்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்பாக ஒருவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சுகவீனம் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாத நிலையில் அவரது மகன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்போதே எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது படம் மற்றும் சின்னம் பொறித்த ரிசேர்ட் அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று புதன்கிழமை (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் தலைவரது புகைப்படம் தாங்கிய ரிசேர்ட்டை அணிந்து கொண்டு மாவீரர் தினத்தில் பங்கு பற்றிய நிலையில் அன்றைய தினமே இராணுவத்தினரால்; கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment